மனைவி ஊருக்கு போனதால் சோகம்...காவல் நிலையம் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

 பல்லாவரம் காவல் நிலையத்தின் மேல் இளைஞர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்த நபர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு. 

சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தின் மேல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட பொழிச்சலூரை சேர்ந்த சூர்யா(26), என்பவர் படிகட்டு வழியாக ஏறிச் சென்று தண்ணீர் தொட்டியின் மீதேறி குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார். 

மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, ஆகியோர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இன்று காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அழைத்து வந்த போது மேலே ஏறி குதித்து விடுவதாக மிரட்டினார். 

மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாகவும், மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் தாய் வீட்டில் உள்ளார். அவரை சேர்த்து வைக்க கோரி பல்லாவரம் பாரதி நகரில் சென்று பிரச்சனை செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக காவல் நிலையத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் பல்லாவரம் உதவி ஆணையர் வெங்கட் குமார் அவரை கீழே இறக்கி அழைத்து வந்து மருத்துவ முதலுதவி சிகிச்சை செய்தனர். 

தற்போது காவல்துறையினர் சூர்யாவிடம் பிரச்சினை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Previous Post Next Post