ஜவான் திரைப்படம் வெளியீடு... விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

 இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தின்  ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று வெளியாகி உள்ள ஜாவன் திரைப்படத்தில் ஷாரூக்கானுடன் விஜய் சேதுபதியும் நடித்திருப்பதால் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரும் கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூடுவாஞ்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் வெளியான ஜாவன் திரைப்படத்தை காண ஏராளமான விஜய் சேதுபதி ரசிகர்கள் வந்திருந்தனர்  வழக்கம்போல் உற்சாகமாக விஜய் சேதுபதி ரசிகர்கள் பேனர், மேளதளத்துடன் ஜவான் திரைபடத்தை கொண்டாடினர்

மேலும் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின்  செங்கல்பட்டு மாவட்ட தலைவர் புல்லட் விக்னேஷ் அவர்கள் முன்னிலையில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைமை சார்பில் ஜவான் படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


அப்போது படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் மரக்கன்றுகளை வழங்கினர்.