நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கோட்டப்பாடியில் கடைகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கோட்டப்பாடி என்ற இடத்தில்  அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள ஒரு கடையை  காட்டு யானை  தாக்கி அங்குள்ள பொருட்கள் எல்லாம் துவம்சம் செய்தது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தினமும் மரண பீதியில் உள்ளனர்  அடிக்கடி யானை உலா வருவதால் அப்பகுதி பொதுமக்கள் தினமும் அச்சத்தில் உறைந்துள்ளனர் மேலும் நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இதுவரை யானை வராத பகுதியில் எல்லாம் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் தோட்டத் தொழிலாளர்கள்  பதட்டத்துடன் உள்ளனர் மேலும் கடத்த காலங்களில் பல்வேறு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதலமைச்சர் மக்கள் வசிக்கும் இடங்களை சுற்றி  அகழி மற்றும் சோலார் மின்வெளி அமைத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழக அரசு செவிசாய்க்குமா  பொறுத்திருந்து பார்ப்போம்
Previous Post Next Post