அதிமுக எப்பொழுதும் தொழில் துறையினருக்கு பக்க பலமாக நிற்கும்... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

 அதிமுக எப்பொழுதும் தொழில் துறையினருக்கு பக்க பலமாக நிற்கும் என்று  போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் பேச்சு.

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது.இதில் தொழில் துறையினருக்கு நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணங்களை அதிகரித்தது. இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தொழில் முனைவோர் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,

கோவை , திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம் பேட்டையில் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தின் போது 

நிலை கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மின்வாரியத்திடமும், ஒழுங்குமுறை ஆணையத்திடமும், தமிழக அமைச்சர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ,அரசின் கவனத்திற்கும், தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் விதமாக இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாகவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும், அது வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.


முன்னாள் அமைச்சரும் அதிமுக பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில்,



அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டார், ஆனால் தற்போது ஆளுகின்ற தமிழக அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை, அதிமுக என்றைக்கும் தொழில்துள்ளையினருக்கு பக்கபலமாக நிற்கும், முன்னாள் முதல்வர் எடப்பாடி.k.பழனிச்சாமி அவர்களிடம் இந்த பிரச்சனை தொடர்பாக கவனத்தில் எடுத்துச் சென்றுள்ளோம், அதிமுக பொதுச்செயலாளர் அவர்கள் எங்களை இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சொன்னார் மேலும் தொழில் துறையினருக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று கூறிவிட்டு வாருங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்தார். எனவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் தமிழகத்தில் இருந்து தொழிலை பெற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையை முற்றிலும் நிறுத்திட வேண்டும் தொழிலை காப்பாற்றி விட வேண்டும் அதுவரை அதிமுக தொழில்துறையினரோடு நிற்கும் என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.

டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் பேட்டி,

தமிழகம் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது, பின்னலாடை துறையில் 70% தொழில்கள் நலிவடைந்துள்ளது, இத்தகைய சூழ்நிலையில் மின் கட்ட உயர்வு என்பது பெரும் இன்னலுக்கு உண்டாகும் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இதனால் தமிழகத்தை விட்டு தொழில்கள் வெளி மாநிலத்துக்குச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது, இந்த உண்ணாவிரத போராட்டம் என்பது தொடக்கம் மட்டும்தான் இனி பல்வேறு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டணைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் பேசுகையில்,

கடந்த ஒரு வருட காலங்களாக மின் கட்டணம் உயர்வால் மிகவும் நெருக்கடிகளை சந்தித்து வந்தோம், இதைத்தொடர்ந்து 38 மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தொழில்துறை சங்கங்களும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தோம் ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

 எனவே முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று காரணம் பேட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், முதலமைச்சர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும், ஏற்கனவே கடந்த 12 மாதங்களாக 10 லட்சம் முதல் 13 லட்சம் வரை பீக் ஹவர் மற்றும் நிலை கட்டணமாக மின்சார துறைக்கு செலுத்தி வருகிறோம், தொழிற்சாலை இயங்கினாலும் இயங்காவிட்டாலும் 3920 பணம் கட்டி வந்த இடத்தில் தற்பொழுது 430 சதவீதம் அதிகரித்து மாதம் 17,200 கட்டணம் செலுத்த வேண்டும், இதனால் சிறு குரு தொழில்கள் மிகவும் சமப்படுவதாகவும் பிற மாநிலத்தோடு போட்டி போட முடியாது சூழ்நிலை நிலவி வருகிறது, எனவே மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்

Previous Post Next Post