தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக குளோபல் மு.பூபதி தேர்வு... மாநில தலைவர் த.வெள்ளையன் அறிவிப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள்   அறிமுக விழா திருப்பூர் எல்லோரா கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில்   தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையின்  மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்தார். மேலும், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

  இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக குளோபல் மு.பூபதி தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டார். 

மேலும், தெற்கு மாவட்ட செயலாளர் அந்தோணி ஞானசேகர், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை தலைவர் கார்த்திகேயன், முகமது அலி ஜின்னா, மாவட்ட இணை செயலாளர் மணி, மாவட்ட கூடுதல் செயலாளர் தர்மராஜ், இளைஞரணி தலைவர் அருள், இளைஞரணி செயலாளர் பிரேம், கெளரவ ஆலோசகர் வீரப்பன், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பாலு, மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகளை மாநில தலைவர் த.வெள்ளையன் அறிவித்தார். இந்த விழாவிற்கு மாநில பொது செயலாளர் சவுந்தரராஜன் என்கிற ராஜா, மாநில பொருளாளர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தொடர்ந்து மாநில தலைவர் வெள்ளையன் பேசும்போது கூறியதாவது:
நம் நாட்டில் உற்பத்தி செய்கின்ற சுய தொழிலை பாதுகாக்க வேண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் இதற்கு பாடுபடும் என தெரிவித்தவர்., மின்சார கட்டணம் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இது போன்ற செயல்களில் செயல்பட்டு இருப்பதாகவும்., மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட விலை உயர்வை உயர்த்தியுள்ளதாக தெரிவித்த்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் இதற்கான போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மாநில பொது செய்லாளர் சௌந்தர்ராஜன்  பேசுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களுக்கு வாட் மூலமாக 27000 கோடி பாக்கி இருப்பதாகவும் அதன் மீது ஏழாயிரம் படங்கள் பதியப்பட்டுள்ளதாகவும் அதை உடனடியாக சமரசம் செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டதாகவும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றுக்கு ஏற்கனவே போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மீண்டும் போராட்ட தயாராக இருப்பதாகவும் அதே போன்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுங்கச்சாவடி வரிகளுக்கு தங்கள் தலை மீது மண்ணை வாரி போட்டு கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. 
இந்த விழாவில் வணிகர் சங்கப்பேரவை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் குளோபல் மு.பூபதி சார்வில்  சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. 


Previous Post Next Post