புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் 3/9/2023 அன்று பேரவையின் முக்கிய நிர்வாகி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் 3/9/2023 அன்று பேரவையின் முக்கிய நிர்வாகி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  RLV ஜனநாயக பேரவையின் நிறுவனத்தலைவர் RL வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் MP இராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பேராசிரியர் முன்னாள் MP ராமதாஸ் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், புதுச்சேரியில்,  தற்போது NR -BJP கூட்டணி அரசின்  அவல நிலைகள்  பற்றியும் , மக்களுக்குண்டான நலத்திட்டங்கள் அனைத்தும்  கிடப்பில் போடப்பட்டது குறித்தும் நிதி ஆதாரம் இல்லாமல் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவது குறித்தும் , இதற்கெல்லாம் தீர்வு காண , மக்கள் நலன் காக்க மாற்று ஏற்பாடு செய்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் புதுவையில் இனி அமைய கூடிய ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்க நல்லவர்கள் ஆட்சி செய்ய  மக்கள் ஒன்றுபட்டு பணத்துக்கும் மிரட்டலுக்கும் அடி பணியாமல் மனதுக்கு பிடித்த நல்லவர்களை தேர்ந்தெடுக்க முன் வரவேண்டும் என்றும் பேசினார்.
நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டத்தில் புதுச்சேரி மக்கள் நிலை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்து கீழ் கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.   புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் 2021 தேர்தலின் போது புதுவை மக்களின் நலன் கருதிதான் பிஜேபி  யுடன் கூட்டணிவைத்துள்ளேன்.  கண்டிப்பாக மாநில அந்தஸ்து பெற்று தருவேன் என்று உறுதி அளித்து 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை  எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை காரணம் காட்டாமல் மாநில அந்தஸ்து பிரச்சனையில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால்  பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே , முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவை மக்கள் நலன் கருதி பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறி மக்களை சந்திக்க வேண்டும் என்று புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
2 ) புதுச்சேரியில் தற்காலிக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்க மாற்றி புதுவைகென்று தனியாக  நிரந்தர துணை நிலை ஆளுநரை நியமிக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு என்று நிரந்தர துணை நிலை ஆளுநர் இல்லாத காரணத்தினால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தர்ப்போது இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானாவில் கவர்னராக இருக்கின்ற காரணத்தினால் புதுவையில் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல தெலுங்கானாவில் ஒரு பார்வை புதுவையில் ஒரு பார்வை என்று இருப்பதனால் புதுவையில் நிர்வாக கோளாறு ஏற்படுகிறது. மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்று அடைவதில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆகவே மக்கள் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக தற்காலிக துணை நிலை ஆளுநர் அவர்களை மாற்றிவிட்டு  புதுச்சேரிக்கு என்று நிரந்தரமாக ஒரு துணை நிலை ஆளுநர் அவர்களை நியமிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் மூலம் கேட்டு கொள்கிறோம்.
3 )ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை வரியை  ரத்து செய்ய வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி அவர்கள் கடந்த 2021 பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது குப்பை வரியை ரத்து செய்து அறிவித்தார். ஆனால் இன்றுவரை ரத்து செய்யப்பட வில்லை. மாறாக நகராட்சியால் கட்டாயவரியாக வசூலிக்கப்படுகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா.? இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும்தான் குப்பைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு குப்பைகளை அள்ளுவதற்கு ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் 240 கோடி நிதி உதவி அளிக்கிறது. அப்படியிருந்தும் மக்களிடத்தில் குப்பை வரி வசூல் செய்வதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.  குப்பைவரி ரத்து என்று அறிவித்த முதல்வர் அதனை நடைமுறை படுத்த தயங்குவதேன்.? மாநில அந்தஸ்து விஷயத்தில் மத்திய அரசை காரணம் காட்டி தப்பிக்கும் முதல்வர் , மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் குப்பை வரி ரத்து செய்ததை ஏன் நடைமுறை படுத்தவில்லை. எதையுமே செய்ய கையாலாகாத அரசு என்பதை மக்களும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4 )       புதுவையில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அல்லது பூரண மதுவிலக்கை  அமல் படுத்த வேண்டும். புதுச்சேரியில் பள்ளிக்கூடம்,கோயில்,பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மது கடைகளை இடமாற்றம் செய்யவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தும் இந்த அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. நிதி சுமையை காரணம் காட்டி அதிக படியான மது கடைகளை திறக்க அனுமதி கொடுத்து விட்டு தாய்மார்களையும், அன்பு சகோதரிகளையும் விதவை கோலத்தில் பார்ப்பதுதான் காமராஜர் ஆட்சியா.? என்று மக்கள் கேட்கும் நிலை உருவாகி உள்ளது. நண்பர் ரங்கசாமி அவர்களுக்கு மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது அக்கறை இருந்தால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் அல்லது பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும்  என்று முதல்வரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
5 )     பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு  மாநில அரசே காரணம்.
புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை கடுமையான ஏற்றத்திற்கு காரணம் மாநில அரசுதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இன்று சாதாரண கூலிழ தொழிலாளி கூட இரண்டு சக்கர வாகனம் கடன் பெற்று வண்டி வைத்திருக்கிறார்கள். இவர்கள் பல இடங்களில் திரிந்துதான் கூலி வேலை , மற்றும் வியாபாரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் வயிற்றில் அடித்து புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவேன் என்று கூறி ஒஸ்ட் புதுச்சேரி யாக வைத்திருக்கும் இந்த அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. மாநில அரசின் வரி உயர்வினால் தான் புதுவையில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  ஆகவே ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன் காக்க அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோல் , டீசல் விலை குறைக்க  அரசு அடுத்த முறை GST கவுன்சில் கூட்டத்திற்கு செல்லும்போது பெட்ரோல் டீசல் மீதான உள்ளூர் வரியை நாங்கள் குறைத்து கொள்கிறோம் என்கிற புதுவை அரசின் கருத்தை தெரிவித்து மாநில மக்களை வரி சுமையிலிருந்து காக்க அரசு முன் வரவேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இச்செயற்குழு கூட்டத்தில்  ராதாகிருஷ்ணன் , ரகுபதி , ஆண்டாள் , ஏம்பலம் விஜயகுமார் , கோமதி ,சுஜி, ஜோதி, உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
முடிவில் காரைக்கால் நிர்வாகி சிவகுமார் அவர்கள் தீர்மானம் வாசித்து அனைவருக்கும் நன்றி கூறினார்.
Previous Post Next Post