நெல்லை - வட மாநிலம் போல பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி தாக்கியதுடன் சிறுநீர் கழித்து அவமானம்- 6 பேர் கைது.!
நெல்லை - வட மாநிலம் போல பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி தாக்கியதுடன் சிறுநீர் கழித்து அவமானம்-
6 பேர் கைது.!
நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்படுகையில் கடந்த 30ம் தேதி கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்களை வழிமறித்து தாக்கியதுடன்
அவர்களின் சாதியை கேட்டு மிரட்டி நிர்வாணப்படுத்தியதுடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமதித்ததாகவும், 5,000 மதிப்புள்ள செல்போனை பறித்தாகவும் புகாரின் பேரில் பொன்மணி, ராமர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் மணிமுத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் மனோஜ்குமார். இவரும் அதேபகுதியை சேர்ந்த சேகர் மகன் மாரியப்பனும் தொழிலாளர்கள். இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் வேலையை முடித்துவிட்டு மணிமுத்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த சிலர் இளைஞர்களை வழிமறித்து தாக்கியதுடன்
அவர்களிடம் சாதியை கேட்டு மிரட்டி நிர்வாணப்படுத்தியதுடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமதித்ததாகவும், 5,000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
நள்ளிரவில் அவர்களிடம் இருந்து தப்பிய மனோஜ்குமார், மாரியப்பன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்மணி (வயது 25), மணக்காடு பகுதியை சேர்ந்த ராமர் மகன் ஆயிரம் (19), சங்கரபாண்டியன் மகன் நல்லமுத்து (21), பாலகிருஷ்ணன் மகன் ராமர் (22), மாரிமுத்து மகன் சிவா (22) ஆகியோர் தொழிலாளர்களை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாா் 6 பேரையும் கைது செய்தனர்.
வட மாநிலங்களை போல பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.