விபத்தில் இறந்த மாலுமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல் அமைச்சரின் நிவாரண நிதி - கனிமொழி எம்பி வழங்கினார்.!
விபத்தில் இறந்த மாலுமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல் அமைச்சரின் நிவாரண நிதி - கனிமொழி எம்பி வழங்கினார்.!
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் அருகே கடந்த அக். 31ஆம் தேதி இரவு 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில், கப்பல் மாலுமியான வசந்தன் பிரீஸ் (34) உயிரிழந்தாா். அவரது உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன், பொது நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். உறுப்பு தானம் செய்ய முன்வந்த வசந்தன் பிரீஸ் குடும்பத்தினருக்கு அவா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி ஆகியோர் மற்றும் அதிகாரிகஉடன் உள்ளனர்.