நள்ளிரவில் செம போதையில் தள்ளாட்டம்... கோவை பெண்களா இப்படி??

 கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து நேற்று இரவு 3 பெண்கள் அரைகுறை மது போதையில் வெளியே வந்தனர்.

அங்கு ஏற்கனவே யமஹா இருசக்கர வாகனத்தில் காத்திருந்த வாலிபருடன் நீண்ட நேரம் மது போதையில் தள்ளாடியபடி பேசிக் கொண்டிருந்தனர்.  பேசும்போதே அவர்கள் போதையில் இருந்ததால் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் அதில் பெண்  யமஹா பைக்கை எடுத்து ஓட்டி செல்ல முற்பட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மற்ற இரு பெண்களும் மது போதையில் இருந்தால் அவர்களால் விழுந்த பெண்ணை எழுப்ப முடியவில்லை.

மீண்டும் அவரை மீண்டும் பைக்கில் ஏற்றிய வாலிபர் வாகனத்தை இயக்க முற்பட்டார். அப்போது உடனிருந்த இரு பெண்கள் அவ்வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டோ டிரைவர் வாகனத்தை எடுத்துச் சென்று விட்டார். மூன்று பெண்களும் யமஹா வாகனத்தில் ஏற முற்பட்டனர். ஆனால் ஏற்கனவே யமஹா பைக்கில் அமர்ந்திருந்த பெண் மது போதையில் தள்ளாடிபடி உட்கார்ந்திருந்தார்.

 இதனால் இரண்டு பெண்களை ஏற்றாமல் அவர் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது இரண்டு பெண்கள் மது போதையில் சாலை நடுவே தள்ளாடியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அச்சாலை வழியாக சென்ற வாகனங்கள் சற்று தடுமாற்றத்துடன் இவர்களை கடந்து சென்றது.

 மீண்டும் 20 நிமிடங்களுக்கு பின் அதே வாலிபர் ஏற்றி சென்ற பெண்ணை லாட்ஜில் இறக்கி விட வந்துள்ளார். அப்போது மது போதை அதிகமானதால் அந்த பெண்ணால் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்க முடியவில்லை. மற்ற இரு பெண்களும் சாலையில் தள்ளாடியபடி வந்து அப்பெண்ணை அடித்து வாகனத்தில் இருந்து இறக்கி லாட்ஜுக்குள் அழைத்து சென்றனர்.

 இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஹோப்காலேஜ் மசக்காளிபாளையம் சாலை பகுதியில் இது போன்ற சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாகவும் சமீப காலமாக சந்தேகத்துக்குரிய நபர்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதாகவும் இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

(இந்த பெண்கள் நலன் கருதி முகம் தெரியாத, அவர்களை அடையாளம் காட்டாத வீடியோ வெளியிடப்பட்டது.)

Previous Post Next Post