அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூ.10 லட்சம்... சிந்து ரவிச்சந்திரன் வழங்கினார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இளைஞரணி மாநாட்டு நிதியாக 10 லட்சம் ரூபாய் சிந்து ரவிச்சந்திரன் வழங்கினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது.மாநாட்டில் தமிழகமெங்கும் இருந்து இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான  உதயநிதி ஸ்டாலின்  மாநாடு வெற்றி பெற தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் சென்று அனைத்து மாவட்டங்களிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்.

கடந்த டிசம்பர் 3ல் காலை ஊட்டியிலும், மதியம் கோவையிலும், டிசம்பர் 4ல் காலை திருப்பூரிலும், மதியம் கரூரிலும் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தினார்.கரூரில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலனை நேரில் சந்தித்து மாநில நெசவாளர் அணி செயலாளர் திரு.சிந்து ரவிச்சந்திரன் , ஈரோடு சட்டக்கல்லூரி இணை செயலாளர் அருண் பாலாஜி, ஸ்ரீ சாய் சிந்து இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட்-ன் துணைத்தலைவர் கிஷோர் மற்றும் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் சாய் சிந்து பவுண்டேசன் சார்பாக ரூ.10 லட்சம் மாநாட்டு நிதி வழங்கினார்கள்.

Previous Post Next Post