மக்களோடு மக்களாக சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் ஸ்டார் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் - மீட்பு படையினர் ஷாக்.!


 மக்களோடு மக்களாக சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் ஸ்டார் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் - மீட்பு படையினர் ஷாக்.!


கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாயின் சிகிச்சை காரணமாக தற்காலிகமாக சென்னைக்கு குடி பெயர்வதாக அமீர்கான் தெரிவித்திருந்தார். அவரது அம்மாவை அட்மிட் செய்துள்ள ஹாஸ்பிடலுக்கு அருகிலேயே தானும் குடியிருக்க போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார் அமீர்கான். இந்த நிலையில் அமீர் கானும் வெள்ளத்தில் சிக்கி உள்ளார் என்பது விஷ்ணு விஷால் போட்டுள்ள பதிவு மூலம் தற்போது தெரியவந்துள்ளது.சென்னை காரப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்லாது, 'நேரம் ஆக ஆக நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. இங்கு சுத்தமாக கரண்ட் இல்லை. வைஃபை இல்லை. சிக்னல் கிடைக்கவில்லை. வீட்டின் ஓரிடத்தில்தான் கிடைக்கிறது. உதவி கேட்டு இருக்கிறேன். எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் விரைவில் உதவி கிடைக்கும் என நம்புகிறேன்' என நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து இருந்தார். இதனை அடுத்து அவருக்கு விரைவில் உதவி கிடைத்துள்ளது.


இன்று அப்பகுதிக்குச் சென்ற தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் நடிகர்கள் ஆமீர்கான் மற்றும் விஷாலை விஷால், அவரது குடும்பத்தினரை மீட்டனர். 


விஷ்ணு விஷால் படகில் மீட்கப்பட்டதாக, வெளியிட்ட புகைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும் இருந்ததுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் அமீர்கான் சென்னையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மும்பைக்குச் செல்வதும், சென்னைக்கு வருவதுமாக இருந்த நிலையில், சென்னை வெள்ளத்தில் அவர் சிக்கிக்கொண்ட தகவலே, அவர் விஷ்ணு விஷாலோடு சேர்ந்து மீட்கப்பட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது.


இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு நடிகர் நடிகர்கள் ஆமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதைப் பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி. அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி." தெரிவித்துள்ளார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா "உங்கள் பக்கத்தில் இருக்கும் ஜென்டில்மேன் அமீர் கானுக்கு நன்றி சொல்லுங்கள். அவ்வளவு பெரிய ஸ்டாரான அவர், தன்னை மட்டும் மீட்க வேண்டும் என்பதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை, எல்லா மக்களையும் போல மீட்கப்படுவோம் என காத்திருந்தார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post