நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை கூட்டம் மோகனூர் குறிகாத்த கருப்பராயன் கோவில் மண்டபத்தில்  10- 2 -2024 ஆம் தேதி காலை பத்து மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது இதில் தலைமை பாலு கிராம கோவில் மாவட்ட இணை அமைப்பாளர் முன்னிலை தங்கநாயக்கன்பட்டி பழனிச்சாமி மோகனூர் ஒன்றிய அமைப்பாளர், மல்லுமாச்சம்பட்டி ரவிக்குமார் ஒன்றிய இணை அமைப்பாளர் ஆண்டாபுரம் தர்மராஜ் ஒன்றிய இணை அமைப்பாளர் வாழ்த்துரை வழங்கியவர்கள் நாமக்கல் ஒன்றிய அமைப்பாளர் புரட்சிமணி மற்றும் குமரவேல் மண்டல அமைப்பாளர் சிறப்புரையாற்றியவர்கள்  விஜயகுமார் வழக்கறிஞர் மாநில இணை பொதுச் செயலாளர் மற்றும் சோமசுந்தரம் மாநில அமைப்பாளர் நன்றியுரை   முருகன் கோவில் பூஜாரிகள் சுப்பிரமணியம் கூறினார் இக்கூட்டத்தில் அனைத்து கிராம கோவில்களுக்கும் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்றும் வரும் மார்ச் இரண்டாம் தேதி திருச்சியில் நடைபெறும் கிராம கோவில் பூஜாரிகள் மாநிலபொதுக் குழுவிற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கோவிலில் இருந்தும் திரளாக பூஜாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர் 
Previous Post Next Post