மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு திமுக தலைமையகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் விருப்ப மனு

*மயிலாடுதுறை பாராளுமன்ற  தொகுதிக்கு திமுக தலைமையகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் விருப்ப மனு!. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளில் மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதிக்கு திமுகழகம் சார்பில் போட்டியிட கோரி மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளருமான  ஜெகவீரபாண்டியன் தனது விருப்ப மனுவினை இன்று கழக தலைமையகமான சென்னை  அண்ணா அறிவாலயத்தில் தலைமை கழக நிர்வாகி தனபால்  அவர்களிடம் கொடுத்தார்..  மாவட்ட கழக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா. எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர் இராம. இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வைத்தீஸ்வரன் கோயில் எஸ். சாமிநாதன் உட்பட கழக முன்னணியினர் உடன் இருந்தனர்..