*கோபி சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் வசித்து வருபவர் யுவராஜ் நாடார். விவசாய தொழில் செய்து வரும் இவர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளராகபோட்டியிடுகிறார். *


 கோபி சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் வசித்து வருபவர் யுவராஜ் நாடார். விவசாய தொழில் செய்து வரும் இவர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். சிறுவயதிலிருந்தே முழு நேர விவசாயியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் சமூக அக்கறையில் ஆர்வம் இருந்ததால் இந்த தேர்தலில் சுயேட்ச்சியாக நின்று போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
என்னை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தால் முற்போக்கு சிந்தனையுடன் சமூகத்திற்கு நான் பாடுபடுவேன் எனவும் மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசின் உதவியோடு பாடுபடுவேன் எனவும், குறிப்பாக அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்று தர முனைந்து செயல்படுவதாகவும் மேலும் தென்னை மற்றும் பனை விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவதாகவும் கூறினார்.
இந்தத் தேர்தலில் மக்களுடன் எனது கூட்டணி அமைத்து மகத்தான வெற்றியை பெற்று பெருந்தலைவர் காமராஜரின் நேர்கொண்ட பாதையிலும், கேப்டன் விஜயகாந்தின் நல்வழி பாதையையும் பின்பற்றி செயல்படுவதாக தெரிவித்தார்.

Previous Post Next Post