கோவையில் அல் அஸ்மா ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸ் புதிய அலுவலகத்தை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் திறந்து வைத்தார்

கோவை குணியமுத்தூர் பகுதியில் அல் அஸ்மா ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸ் புதிய அலுவலகத்தை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் திறந்து வைத்தார்..

இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் உம்ராவிற்கு பயணம் செய்வோரை அனுப்பும் சேவையில் கடந்த இருபது வருடங்களாக அல் அஸ்மா ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் டிராவல்ஸ் செயல்பட்டு வருகிறது..இந்நிலையில் தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவை குனியமுத்தூர் ஆயிஷா மகால் சாலையில் அல் அஸ்மா ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் தனது புதிய கிளையை துவக்கி உள்ளது..இதற்கான துவக்க விழா அல் அஸ்மா ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் நிர்வாக இயக்குனர் ஹஜ்ரத் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினராக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில்,  அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பொதுச் செயலாளர், எம்.ஐ முகமது அலி மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர் , அனைத்து ஜமாத் கூட்டமைப்பு. ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர்  எஸ்டிபிஐ மாநில செயலாளர் ராஜா உசேன் சாலம் பாஷா பல.சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹீர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  வழக்கறிஞர் முகமது இஸ்மாயில் ,தகவல் தொழில் நுட்ப அணி கே.யு அபுதாகிர், மாவட்டத் துணைச் செயலாளர் மெட்டல் சலீம் திருப்பூர் மாவட்ட தலைவர்  ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
Previous Post Next Post