மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தேசிய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி காலமானர்.



சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.,12) காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.