சர்வதேச தடகளப்போட்டிக்கு திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி தேர்வு


ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்திய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் இடையே நடந்த தடகள போட்டிகளில் 

திருப்பூர் ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த வீராங்கனை  எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 1:32 மணிக்குள் ஓடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.


 இதன் மூலம் இவர் வருகிற ஜூலை 16-ல் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் உலக சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வாகி திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார். பயிற்சியாளர் அழகேசன் உள்ளிட்டோர் வீராங்கனை எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.