தோட்டத்து வீட்டில் கணவன்-மனைவி அடித்துக் கொலை... 30 பவுன் நகை கொள்ளை..

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயி. இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்து வரும் கணவன், மனைவி இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி., சுஜாதா ,  பெருந்துறை டிஎஸ்பி., கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட  பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்கவளையல் உட்பட  30 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளது  முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .

 மேலும் வீட்டினுள் பீரோவில் ஏதேனும் நகைகள் கொள்ளை போய் உள்ளதா என்பதை குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு வந்த கோவை சரக ஐஜி செந்தில்குமார்   கொலை  செய்யப்பட்டவர்கள்  உடல்கள் மற்றும் வீட்டை  ஆய்வு செய்தார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்து சென்றார். இதனுடைய கொலை நடைபெற்ற வீட்டிற்கு உள்ளே  உறவினர்கள் மற்றும் செய்தியாளர்கள் என யாரையும் உள்ள விடமாட்ட காவல்துறையினர் வீடு முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்

பல்லடம் பகுதியில் நடைபற்ற மூவர் கொலை சம்பவம் போல தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே 2020- ம் ஆண்டு முதல் 2023- ம் ஆண்டு வரையில் சென்னிமலை காங்கேயம் அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்காக ஆதாய கொலைகள் நடைபெற்று உள்ள நிலையில்.தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதான தம்பதியினரை நகைக்காக கொலை செய்யப்பட்டு உள்ளனரா என்ற கோணத்தில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..