திரெளபதியின் தாகம் தீர்க்க பீமன் உருவாக்கிய பீம்தால் ஏரி!

நாம் வாழும் இந்த 2025ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 3100 ஆண்டுகள் முதல் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் தான் பாண்டவர்கள் காலம். அதாவது மகாபாரதக் காலம். அப்போதைய காலகட்டத்தில் பாண்டவர்களின் வனவாச காலத்தில் பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளில் பாண்டவர்கள் சுற்றித்திரிந்தார்கள். 



12 ஆண்டு வனவாச காலத்தில் இமயம் முதல் குமரிவரையில் பல இடங்களில் பஞ்சபாண்டவர் தொடர்பான வரலாற்று இடங்கள் இன்னும் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றாக இருப்பதுதான் பீம்தால் ஏரி. இந்த பீம்தால் ஏரியானது பாண்டவர்கள் வனவாசத்தின்போது, இமயமலையில் குமாவோனி பகுதியில் திரெளபதியுடன் சுற்றித்திரிந்தார்கள். அப்போது திரெளபதி தாகத்திற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதற்காக பீமன் தனது கதாயுதத்தால் மலையை உடைத்து இந்த ஏரியை உருவாக்கினாராம். ஏரியின் கரையில் சிவலிங்கத்தை வைத்து பூஜையும் செய்திருக்கிறார். இந்த இடமே இப்போது பீம்தால் ஏரியாகவும், பீமேஷ்வர் கோவிலாகவும் இருக்கிறது.


பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிற இந்த பீம்தால் ஏரியானது, 5 ஆயிரம் அடி உயர மலைமேல் இருக்கிறது.  17 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட பீம்தால் ஏரி இந்த பகுதிக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மகாபாரத காலத்தில் பீமனால் உருவாக்கப்பட்டு இன்றும் மக்களுக்கு குடிநீர் தரும் ஏரி என்று இப்பகுதியினர் பெருமை கொள்கின்றனர். தெளிவான தண்ணீர் கொண்ட பீம்தால் ஏரியில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாது என்றும் தெரிவிக்கிறார்கள். தண்ணீர் அதிகமானால் வெளியேற்ற ஒரு அணையும் அமைத்துள்ளனர். 


ஏரியின் கரையில் பீமேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அய்யன் எம்பெருமானை இங்கு லிங்கமூர்த்தியாக வணங்கலாம். பீமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திருமேனி 5 ஆயிரம் ஆண்டு அபிஷேக வழிபாட்டை கண்டிருப்பதாக உத்தரகாண்ட் மக்கள் கூறுகிறார்கள்.  17 ஆம் நூற்றாண்டில் குமாவோன் பிராந்தியத்தின் சந்த் வம்சத்தைச் சேர்ந்த மன்னர் பாஸ் பகதூர் என்பவரால் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. 


பாரம்பரியமிக்க பீமேஷ்வரரை அமைதியாக தரிசனம் செய்யலாம். தெளிவான பீம்தால் ஏரி தண்ணீரில் போட்டிங் செல்லலாம். ஏரியின் நடுவில் உள்ள தீவில் அக்வாரியம் கஃபே அமைத்துள்ளனர். படகில் சென்று ரிலாக்ஸ் பண்ணலாம். 


மே.24.ம் தேதி பீமேஷ்வரரை கும்பிடலாம்... பீம்தாலில் மிதக்கலாம்..