எந்தவிதமான போராட்டமும் செய்யாமல் வேங்கை வயலை பற்றி பேசுவதற்கு மத்திய நிதி அமைச்சிருக்கோ பாஜகவிற்கோ தகுதி இல்லை திருப்பூரில் நடைபெற்ற வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர். வன்னியரசு பேட்டி..
வக்பு திருத்தச் சட்ட மசோதாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராயல் ராஜா தலைமையில் சி. டி.சி.பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வன்னியரசு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு அம்பேத்கர் வடிவமைத்த 26 சட்டத்தை பாஜக அரசு திருத்தம் செய்து சட்டத்தை இயற்றி வருவதாகவும் இந்த வகுப்பு திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்றும் எதிர்வரும் 14ஆம் தேதி புதிய நீதி அரசர் ஹவாய் அவர்கள் பதவி ஏற்க உள்ளார்.
என்றும் அவர்கள் இந்த வக்பு சட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் அதுதான் அம்பேத்கருடைய அரசியல் அமைப்பு சட்டமாக அமையும் என்றும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருவதாகவும் பாஜக அரசிடம் நேர்மை இல்லை என்றும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று விட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி 26 நபர்கள் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தார்கள்.
அந்த இடத்திற்கு கூட செல்லாமல் பீகார் மாநிலம் சென்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருவதாகவும் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திசைதிருப்பும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசி உள்ளார் என்றும் 2023 ஆம் ஆண்டு மகளிருக்கு 33 சதவிகித மசோதாவிற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவாரா என்பது சந்தேகம் உள்ளதாகவும் அதேபோல வேங்கை வயலைப் பற்றி பேசுவதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜகவுக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர்.APR. மூர்த்தி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் துறைவளவன், ஈரோடு மாவட்ட செயலாளர்.SM. சாதிக், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்.சத்யன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
பேட்டி-வன்னியரசு-விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்.