திருப்பூர் மாணவன் தயாரித்த பிரம்மாண்ட தேசியக் கொடி! கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படுகிறது

திருப்பூர் மாணவன் தயாரித்த பிரம்மாண்ட தேசியக் கொடி! கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படுகிறது



திருப்பூரில் கல்லூரி மாணவர் 90 ஆயிரம் வண்ண ஸ்டிக்கர்களை பயன்படுத்தி பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



திருப்பூரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல்  கல்லூரியில் 4ம் ஆண்டு பயின்று வருகிறார்.


இவர் நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி 5*4 செ.மீ அளவுள்ள 90 ஆயிரம்  ஸ்டிக்கர்களை பயன்படுத்தி ப்ளக்ஸ் பேனர் அச்சடிக்க பயன்படும் பிளாஸ்டிக் விரிப்பில்  9 மீ உயரம் 18 மீ நீளம் என 162 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தேசிய கொடியை 70 மணி நேரம் செலவழித்து தனி நபராக உருவாக்கியுள்ளார். இவரது இந்த முயற்சி கின்னஸ் சாதனை நிகழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
பேட்டி : பிரவீன் குமார்.


Previous Post Next Post