பழனி சண்முக நதியில் 24 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான  வெற்றிவேல்!


அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக திகழ்கிறது பழனிதண்டாயுதபாணி கோவிலாகும். தமிழகம் மற்றும் வெளிமாநிலம்.வெளிநாடுகளில் இருந்து தினமும் பழனிக்கு பக்தர்கள் வருகின்றனர். பழநிக்கு வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக  ஆறு நதிகள் இணையும் பகுதியான சண்முகநதிக்கு குடும்பத்துடன் வந்து  முடி காணிக்கை செலுத்தி பின் பழனி மலைக்கோவிலுக்கு முருகனை வழிபட செல்கின்றனர். சண்முக நதியில்  பக்தர்கள் நீராடும் பகுதியில்  24அடி உயரமுள்ள  மிக  பிரமாண்டமான வெற்றி வேல்  நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்து.

 


 

விழாவில் மெய்தத்தவ அடிகளாரின் பொற்சபை. மற்றும் சண்முக நநியினை தூய்மைபடுத்தும் குழு இந்து முன்னணி சார்பில் 24அடி உயரமுள்ள ஐம்பொன் வேல் கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட வேல் பக்தர்கள்நீராடும் தெற்குபகுதியில் பிரதிஷ்டைசெய்யப்பட்டது. விழாவில் பொற் சபையின் நிறுவனர் மெய்தவம் செந்தில் அடிகள் வழக்கறிஞர் பன்னாடி ராஜா தங்கராஜ் ஆடிட்டர் ஆனந்த சுப்பிரமணியன் சங்கராலயம் பாலசுப்பிரமணி ஆர் சுந்தர் கந்தசாமி யோகா முருகன் ரிஷிகேஸ்.  சண்முகநதி தூய்மைபடுத்தும் குழுவின் சரவணபொய்கைஶ்ரீகந்தவிலாஸ் முனைவர் பாஸ்கரன் கருடானந்தசுவாமிகள். இந்து முன்னணியின் மாவட்ட பொது செயலாளர் ஜெகன் நரேந்திரன் விழாவில் மற்றும் ஏராளமானபொதுமக்கள் பக்தர்கள்  கலந்து கொண்டனர்.