தற்காலிக காய்கறி மார்க்கெட்கள் தொடக்கம்: 1360 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தல்

திருப்பூரில் ஊரடங்கு நான்காம் நாளான இன்று திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும் தற்காலிக காய்கறி மார்க்கெட்கள் துவக்கப்பட்டன. 

 

திருப்பூர் வடக்கு உழவர் சந்தையானது, திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் பகுதியில் துவகப்பட்டது. பஸ் நிற்கும் ரேக்குகளில் ஏராளமான விவசாயிகள் காய்கறி கடைகளை அமைத்து இருந்தனர்.

 

பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்க கோடுகள் வரையப்பட்டு இருந்தது. அதிகாலை முதல் வரிசையில் நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். பொதுமக்கள் கை கழுவுவதற்கு ஹேண்ட் வாஷர் வழங்கப்பட்டு வசதி செய்யப்பட்டு இருந்தது. 


 

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டிலும் விவசாயிகள் ஏராளமானோர் கடை விரித்து இருந்தனர். ஆனால் இங்கு பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்க கோடுகள் போடப்படவில்லை. அதனால் பொதுமக்கள் நெருக்கமாகவே நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.

 

ரோடுகளில் பெருமளவு வாகனங்கள் சுற்றுவதை காண முடிந்தது. ஊரடங்கின் முதலிரண்டு நாட்களை போல கடுமையான நடவடிக்கைகள் இல்லை. வாகன ஓட்டிகள் அசால்டாக வந்து சென்றனர். 


திருப்பூரின் பல பகுதிகளில் பொதுமக்கள் மாலை நேரங்களில் வீடுகளின் முன்புறம் வேப்பிலை, மஞ்சள் மற்றும் விளக்கு வைத்தனர். இது பெரிச்சிபாளையம் பகுதியில் எடுக்கப்பட்ட படம்.

 


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுந்தரம், மாநகர கமிஷனர் சிவக்குமார், தலைமை பொறியாளர் சபியுல்லா, உதவி ஆணையர்கள் சுப்பிரமணி, கண்ணன், மாநகர் நல அலுவலர் பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தொடர்ந்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறீயது: 

திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில்  1360 பேர் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ,  மாவட்டத்தின் திருப்பூர் உடுமலை தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


 

சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. என கூறினார்.


 

காய்கறிகளும் மருந்துகளும் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார். 

 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 1360 பேரில் யாருக்கும் கொரோனா தொற்று கிடையாது. மக்கள் நலனுக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 


திருப்பூர்  பி.என் ரோடு பூலுவப்பட்டி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட திருமுருகன்பூண்டி போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி  அனுப்பினர். 

 

 

Previous Post Next Post