கொரோனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கி மருந்து தெளித்த திமுக எம்.எல். ஏ., கணேசன்

கல்லூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக திட்டக்குடி திமுக எம்எல்ஏ 
சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்தார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கல்லூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக கல்லூர், மற்றும் பொடையூர் ஊராட்சியில் உள்ள கடை பகுதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தெரு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் கே என் டி சுகுணா சங்கர் தலைமையில் 
சிறப்பு அழைப்பாளராக திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ கணேசன் கலந்துகொண்டு டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர்  மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்தார்.


பின்னர் கொரோனா  நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெள்ளையம்மாள் ஜானகிராமன் ,கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.