கொரோனாவை தடுக்க புல்லூர் ஊராட்சி ஆட்டோ மூலம் விழிப்புணர்வு

புல்லூர்  ஊராட்சியில் கொரோனா நோய் பரவாமால் தடுக்க ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் அருகில் உள்ள புல்லூர்  ஊராட்சியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில்  கொரோனா வைரஸ் நோய் பரவாமல்  தடுக்க  கடைபகுதி,பேருந்துநிலையம்,மருத்துவமனை  மற்றும்  பொது இடங்களில் தூய்மை காவலர்கள் கொண்டு  கிரிமிநாசினி  மருந்து மற்றும் பிளிச்சிங் புவுடர்  ஊராட்சி மன்ற தலைவர்  சூர்யா பாஸ்கர் தலைமையில் தெளிக்கப்பட்டது.


மேலும் ஆட்டோ மூலம் ஒளிப்பெருக்கியால்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மற்றும் கூட்டுறவு பால் கொள்முதல் நிலையத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு  கட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர்  கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வும்  அனைவரும் மாஸ்க் அணிந்தும்  செல்ல வேண்டுமென அறிவுறுத்தினார்.


இதில்  ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற
 துனை தலைவர்,வார்டு உறுப்பினர்கள்     மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.