போத்தனூர் ரயில்வே மருத்துவமனை சென்றவர்கள் உஷார்

கோவையில் உள்ள போத்தனூர் ரயில்வே மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. காரணம் மருத்துவர் டோனோ என்பவர்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மருத்துவமனையில் இருந்து போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு மாறுதல் ஆகி வந்தார்.


அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட இரயில்வே பணியாளருக்கு  சிகைச்சை அளித்து வந்துள்ளார்  என தெரியவருகிறது.


ஆகவே கடந்த இரண்டு நாட்கள் போத்தனூர் ரயில்வே மருத்துவமனை சென்றவர்கள் உஷாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.


மேலும் அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் முன்வந்து சிகிச்சை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23 தேதியில் இருந்து 26 தேதிவரை அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.