வென்னி மலை முருகன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது









தென்காசி பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளன்று சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

அதனை முன்னிட்டு காலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மர் கோயில் தெப்பகுளம் அடைந்தது ,  அங்கு சுவாமி அம்பாளுக்கு அனைத்து திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் விசேஷ தீபாராதனை நடைபெற்றது.  பூஜைகளை  ரவி பட்ட்சாரியர் தலைமையில் வேத விற்ப்பன்னர்கள் செய்தனர் 

 

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது  ,  மீண்டும் மாலையில் நரசிம்மர் கோவில் தெப்பத்தில் இருந்து  சுவாமி புறப்பட்டு வென்னிமலை கோவில் வந்தடைந்தது. அங்கு  புஷ்பாஞ்சலி தீபாராதனையும் நடைபெற்றது. கோவிலில்  இதில் கீழப்பாவூர் ராம் பஜனை மண்டலியர்  நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், கும்மி நடைபெற்றது மற்றும் . இரவு பக்தி சொற்பொழிவு நடைபெற்றது , தொடர்ந்து  பக்தர்களுக்கு   பிரசாதம் வழங்கப்பட்டது







 

 



 

Previous Post Next Post