சேலத்தில் வீட்டுக்கு வந்து பொருட்கள் விநியோகம்: கலெக்டர் தகவல்

தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி சமூக தொற்றான கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு சேலம் மாவட்ட பொது மக்கள் பல்பொருள் அங்காடிகளில் ஒன்றாக கூடுவதை தடுக்கவும், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் தொலைபேசி மூலம் பொருட்கள் ஆடர் செய்தால் வீடுகளுக்கே வினியோகம் செய்ய கீழ்குறிப்பிட்டுள்ள கடைகள் முன்வந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிடோர் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே தனியார் மளிகை விற்பனை கடைகளில் அப்பொருட்களின் விலையோடு ரூ.20/- வினியோக கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம். பொது மக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் முக கவசங்களை செய்தி தாள்கள் போன்ற எளிதில் மக்கும் தன்மையுடைய பேப்பர்களில் உட்புறத்தில் வைத்து மடித்து அதன் மேற்புறம் சிகப்பு வண்ண பேனாவின் மூலம் பெருக்கல் (X) குறியிட்டு குப்பை தொட்டியில் தனியாக வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி. அ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் தீவிரமாக மேற்கெள்ளப்பட்டு வருகின்றன. விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு எனவும், மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 21 நாட்கள் ஊரடங்கை நாமும் கடைபிடிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதோடு, 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்கள். இதன் படி சேலம் மாவட்டத்தில் வரும் முன் காப்போம் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு அரசு மேற்கொண்டு வருகின்ற கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். அரசின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் சுய தனிமை படுத்தலை கடைபிடித்தால்தான் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுத்திடமுடியும். இத்தடை உத்தரவினை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் படி சேலம் மாவட்டத்தில் தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களை பெற இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே கீழ்கண்ட தனியார் மளிகை விற்பனை கடைகளில் அப்பொருட்களின் விலையோடு ரூ.20/- வினியோக கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி சமூக தொற்றான கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு சேலம் மாவட்ட பொது மக்கள் பல்பொருள் அங்காடிகளில் ஒன்றாக கூடுவதை தடுக்கவும், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் தொலைபேசி மூலம் பொருட்கள் ஆடர் செய்தால் வீடுகளுக்கே வினியோகம் செய்ய கீழ்குறிப்பிட்டுள்ள கடைகள் முன்வந்துள்ளன.


 


 


ஆத்தூர் ராமகிருஷ்ணா ஸ்டோர்ஸ், ராணிப்பேட்டை, 97903 94189 ஆத்தூர் 2. | ஆத்தூர்- நகரப் பகுதிகள் (மல்லி சூப்பர் மார்க்கெட், மல்லியகரை, 94423 87272 3. | ஆத்தூர்- நகரப் பகுதிகள் | நேசனல் ஏ1 சூப்பர் மால், சேலம் மெயின் 95786 90000 ரோடு, ஆத்தூர் | அயோத்தியாபட்டிணம் ஸ்ரீ செல்வமதி சூப்பர் மார்க்கெட், 99434 30107 அயோத்தியாபட்டினம் 5. | எடப்பாடி- நகரப் பகுதிகள் ஜனதா சூப்பர் மார்க்கெட், பூலாம்பட்டி 98420 55665 மெயின் ரோடு, எடப்பாடி. 6. எடப்பாடி- நகரப் பகுதிகள் | சுதா மளிகை, கடைவீதி, எடப்பாடி. 98655 87487 7. I இளம்பிள்ளை ஓம் சக்தி சூப்பர் மார்க்கெட், இடங்கணசாலை பேருந்து நிறுத்தம் எதிரில், 99528 61143 8. | கெங்கவல்லி ஜி.எஸ்.எம் ஷாப்பிங் மார்ட், ஆத்தூர் மெயின் 95669 03558 ரோடு, கெங்கவல்லி. 9. | மேட்டூர் டே டுடே சதுரங்காடி, மேட்டூர் 6380558775 10. பெத்தநாயக்கன்பாளையம் | லக்கி ஸ்டோர்ஸ், சேலம் மெயின் ரோடு, 7402190061 பெத்தநாயக்கன்பாளையம். 11. பெத்தநாயக்கன்பாளையம் பசுமை சூப்பர் மார்கெட், இடையப்பட்டி, 94898 33571 பெத்தநாயக்கன்பாளையம். 12. சேலம் மாநகராட்சி 9 டு 9 சூப்பர் மார்கெட், அங்கமாள் காலணி, 72005 57888 சேலம். 13. சேலம் மாநகராட்சி ஆனந்தம் சூப்பர் மார்கெட், தாதகாப்பட்டி, 82203 83435 சேலம். 14. சேலம் மாநகராட்சி பாரதி சூப்பர் மார்கெட், அஸ்தம்பட்டி, சேலம். 80125 84747 15. சேலம் மாநகராட்சி பாரதி சூப்பர் மார்கெட், இட்டேரி ரோடு, 88250 88250 அஸ்தம்பட்டி, சேலம். 16. சேலம் மாநகராட்சி பாரதி சூப்பர் மார்கெட், சாரதா காலேஜ் 98424 14747 ரோடு, ஃபேர்லாண்ட்ஸ் , சேலம். 17. சேலம் மாநகராட்சி டி மார்ட், 5 ரோடு, சேலம். 9740187473| 18. சேலம் மாநகராட்சி மாடர்ன் சூப்பர் மார்கெட், சீலநாயக்கன்பட்டி, 99428 80212 சேலம். 19. சேலம் மாநகராட்சி ரிலையன்ஸ் மால், 5 ரோடு, சேலம். 98404 19781 20. சேலம் மாநகராட்சி ரிலையன்ஸ் ரீடைல் ஷாப், அம்மாப்போட்டை, 80569 66740 சேலம். 21. சேலம் மாநகராட்சி ரிலையன்ஸ் ரீடைல் ஷாப், அஸ்தம்பட்டி, 98401 69358 சேலம். 22. சேலம் மாநகராட்சி ஸ்ரீ அமுதம் சூப்பர் மார்கெட், கன்னங்குறிச்சி மெயின் ரோடு, | | 8754272757 சின்னதிருப்பதி. 23. சங்ககிரி அஜந்தா சூப்பர் மார்கெட், சங்ககிரி. 98420 55665 24. சங்ககிரி ஜனதா சூப்பர் மார்க்கெட், பவானி மெயின் 85085 07500 ரோடு, சங்ககிரி. 25. சங்ககிரி ராயல் மளிகை, கெமிக்கல் பிரிவு ரோடு, 95855 90058 சங்ககிரி. 26. தலைவாசல் கண்ணா ஸ்டோர்ஸ், வீரகனூர். 9942073483 27. தலைவாசல் நியு கண்ணா சூப்பர் மார்க்கெட், 98948 51977 தலைவாசல். 28. தம்மம்பட்டி 94438 58717 29. தம்மம்பட்டி 90954 90959 30. உடையப்பட்டி 93611 08252 31. வாழப்பாடி 96557 22444 தனம் ஸ்டோர்ஸ், உடையார்பாளையம், தம்மம்பட்டி. திவ்யம் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், தம்மம்பட்டி. ஸ்ரீ செல்வமதி சூப்பர் மார்க்கெட், உடையாப்பட்டி. சிவ முருகன் சூப்பர் மார்க்கெட், கடலூர் மெயின் ரோடு, வாழப்பாடி. காய்கறிகள் முனிப்பன் காய்கறிகடை, பால்மார்க்கெட், செவ்வாய்பேட்டை. டிட்டா வெஜ்மார்ட், பிருந்தாவன்ரோடு, ஃபேர்லாண்ட்ஸ் , சேலம். விளைச்சல் காய்கறி மார்க்கெட் சங்கம், செவ்வாய்பேட்டை. இந்திராணி காய்கறி வணிகம், உடையாப்பட்டி. 32. செவ்வாய்பேட்டை 93621 10739 33. ஃபேர்லாண்ட்ஸ் 84891 90909 98438 90789 34. சேலம் மாநகராட்சி 35. சேலம் மாநகராட்சி 98431 19293 36. உடையாப்பட்டி 89402 55897


 


 


மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் அத்தியாவசிய மளிகை பொருட்களை பெற இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிடோர் அவர்களது இல்லத்திற்கு அருகில் உள்ள மளிகை அங்காடி மற்றும் காய்கறி அங்காடிகளை அவர்களது கைபேசி தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களை கேட்டு தங்களது வீட்டிற்கே நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக சம்மந்தப்பட்ட அங்காடிகளுக்கு வினியோக கட்டணமாக கூடுதலாக ரூ.20/- தரவேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை. பொது மக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்திய முக கவசங்களை செய்தி தாள்கள் போன்ற எளிதில் மக்கும் தன்மையுடைய பேப்பர்களில் உட்புறத்தில் வைத்து மடித்து அதன் மேற்புறம் சிகப்பு வண்ண பேனாவின் மூலம் பெருக்கல் (X) குறியிட்டு குப்பை தொட்டியில் போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சுகாதாரப்பணியாளர்கள் முக கவசங்களை உரிய பாதுகாப்புடன் அப்புறப்படுத்த எளிதாக இருக்கும். பிறருக்கும் நோய் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.