கொரோனாவை தடுக்க களத்தில் இறங்கிய பேட்டை தீயணைப்பு வீரர்கள்

கொரோனா தடுக்க களம் இறங்கிய பேட்டை தீயணைப்பு வீரர்கள்நெல்லை பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இன்று மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பேட்டை வீரபாகு நகர் முனிசிபல் பஸ் நிறுத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதி மீனாட்சி தியேட்டர் வேன்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தீயணைப்பு வாகன தண்ணீரில் கிருமி நாசினி கலந்து அந்த தண்ணீரை குடியிருப்பு பகுதிகளில் பீச்சியடித்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்த செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.