300 குடும்பங்களுக்கு காய்கறி வழங்கி உதவிய நெமிலி கிராம இளைஞர்கள்


https://tamilanjal.page/

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. ஊரடங்கு தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் பொது மக்கள்அத்தியாவசிய பொருட்களுக்காக மிகவும் சிரமப் படுகிறார்கள்.

 

https://tamilanjal.page/

 

அதே நேரத்தில் தனியார் அமைப்புக்களும், தனி நபர்களும் ஆங்காங்கே உதவி வருகிறார்கள். அது போல காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் நெமிலி கிராமத்தில் அப்பகுதி இளைஞர்கள் வெ.சுரேஷ், வழக்கறிஞர் மா.தீபன், பாரதிராஜா, கார்த்திகேயன், திலகர், தமிழரசன், வசந்த், டில்லி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அவர்கள் சார்பாக சுமார் 300 குடும்பங்களுக்கு,

 

https://tamilanjal.page/

 

தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் தக்காளி 2 கி, வெங்காயம் 2 கி, உருளைகிழங்கு 1கி, கத்தரிக்காய் 1கி, புடலங்காய் 1 கோஸ் 1, கேரட் 500கிராம், பீட்ரூட் 500 கிராம் வீதம் வழங்கினார்கள். இவர்களிளின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

.



 

 


 

Previous Post Next Post