பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் அரசு மருத்துவமனை இணை இயக்குநருடன் சந்திப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட  தலைவர் திருப்பூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் G.சாந்தி அவர்களுடன் சந்திப்புகொரோனோ தொற்றின் காரணமாக உலகமே அச்சமுற்று இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும்  குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது.


தற்போது 
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த சுமார் 45 நபர்கள் குறித்தும் கேட்டறியபட்டது.


அவர்களுக்கான தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  


இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் 


அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


அவர்கள் அனைவரும் நாங்கள் பணி செய்வதற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் 
இணை இயக்குனர் G. சாந்தி அவர்கள் கூறினார்.


இந்த சந்திப்பில் இணை இயக்குனர் G.சாந்தி அவர்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி (Daen)முதல்வர் திருமதி வள்ளி சத்தியமூர்த்தி அவர்களும் மற்றும் அரசு சிறப்பு மருத்துவர்களும் உடனிருந்தனர்.


 தற்போதுள்ள தமிழகத்தின் சூழல் குறித்து  திருப்பூர்  பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்டத் தலைவர் A.ஹபீப் ரஹ்மான் தலைமையில் மனு ஒன்றும்  இணை இயக்குனர் G.சாந்தி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.


இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநகர செயற்குழு உறுப்பினர் A.ராஜா முஹம்மது மற்றும் 


எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி செயலாளர் M.S. ஷேக் அபுதாஹிர்  ஆகியோர் உடன் இருந்தனர்.