உதவுவதையே ஒரு வேலையாக செய்து வரும் திருப்பூர் மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திராசுந்தரம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருப்பூரில் கஷ்ட்டப் படுபவர்களுக்கு உதவுவதையே ஒரு வேலையாக செய்து வருபவர் மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திராசுந்தரம் (ரோட்டரி எவரெஸ்ட்). இன்று ராயபுரம் பகுதியில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள ஒருவரின் குடும்பம், ஊனமுற்றவர், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என்று 10 குடும்பங்களுக்கு 20 நாட்களுக்குத் தேவையான அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மதியம் நஞ்சப்ப பள்ளி அருகில், ரயில் நிலையம் அருகில், பெருமாள் கோவில் பகுதி, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு, கங்கையை ரோடு போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 500 ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


மாலை நேரத்தில் ஈஸ்வரன் கோவில் அருகில், பழைய பேருந்து நிலையம் உட்பட சில பகுதிகளில் 120 பேருக்கு டீ, பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கினார். தினமும் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உதவி வருகிறார். சில இடங்களில் அந்தந்த நேரத்தில் இவரை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். ஊரடங்கு சமயத்தில் ஏழை குடும்பங்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆறுதலாக இருந்து வருகிறார் மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திராசுந்தரம்  (ரோட்டரி எவரெஸ்ட்).


Previous Post Next Post