குடியாத்தத்தில் ஏழை எளியோருக்கு மளிகை தொகுப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சொர்ணம் வர்த்தக நிறுவனம் மற்றும் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கமும் இணைந்து கொரானா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு மளிகை தொகுப்பை நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சொர்ணம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் வைதேகி கார்த்திகேயன் மற்றும்  சுஜாதா ஆகியோர் தலைமை தாங்கினார்கள் நகராட்சி கமிஷனர் எச்.ரமேஷ் மற்றும் லயன்ஸ்சங்க வட்டாரதலைவர் எம்கே.பொன்னம்பலம் கலந்துகொண்டு 120 ஏழைக்குடும்பங்களுக்கு மளிகை தொகுப்புக்களை வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் நகர லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் வக்கில் குமார் முன்னாள் வட்டாரத்தலைவர் சுரேஷ்குமார் துணை பொருளாளர் ஜெ.பாபு உறுப்பினர்கள் கோல்டன் பாபு எஸ். தில்லைநாதன் சொர்ணம் நிறுவனம் மற்றும் நகராட்சிஊழியர்கள் கலந்து கொண்டனர்