திருப்பூர்: மாஸ்க் அணிந்து வந்தால் 15 ரூபாய் தக்காளி 12 ரூபாய் காய்கறி வியாபாரியின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு 12 ரூபாய் என கூவி விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை ஷேர் செய்த திருப்பூர் கலெக்டர் அந்த வியாபாரியை பாராட்டி உள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.