டெல்லியில் உள்ள தமிழர்களை தமிழகம் அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

 


 இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .


கடந்த மார்ச் மாதம் டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழர்களை கொரோனா தொற்று சம்பந்தமாக அம்மாநில அரசு மருத்துவ பரிசோதனை செய்து தனிமை படுத்த பட்டு மருத்துவ பாதுகாப்பில் இருந்து சிகிச்சை முடிந்து  குணமடைந்துள்ள தமிழர்கள் அணைவரையும் தமிழகத்திற்கு அழைத்து வர தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 


 சுல்தான்புரியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு முறையாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன . மூன்று வேலையும் குறைந்த அளவே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் முகாமில் தங்கியுள்ள தமிழர்கள் அணைவருக்கும் சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகள் மற்றும் போதுமான உணவுகள்  வழங்கிட அம்மாநில அரசை தமிழக அரசு உரிய அழுத்ததை கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.  


 டெல்லி முகாமில் தங்கியிருந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபா அவர்கள்  உடல் நலக்குறைவால் நேற்றிய முன்தினம் உயிரிழந்துள்ளார். என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது  . மேலும் முஸ்தபாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் .


எனவே  : டெல்லி முகாமில் தங்கியிற்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்துள்ள முஸ்தபா குடும்பத்திற்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .


Previous Post Next Post