மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்


 

திமுக தலைவர் ஸ்டாலின்  ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமையில்  வழங்கப்பட்டது.

 

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியினை 

கரியப்பன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்க உத்தர சாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் உதவி செய்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பி.கே.விஸ்வநாதன் துணைத் தலைவர் வெங்கடாசலம் மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர்

தென்றல் ரமேஷ் முன்னாள் நகர செயலாளர் மாரிமுத்து மற்றும் ஊராட்சி செயலாளர்கள், மூர்த்திகுமார், மற்றும்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.