திருப்பூரில்120 திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்-கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார் 


திருப்பூரில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஏழை மக்களுக்கு திருப்பூர்  மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உணவு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


இதுவரை மாநகர் மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் 120 திருநங்கைகள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்தனர். 

 


 

அவர்களுக்கு  அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

 

இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்  ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள். 

 

நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் பட்டுலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர் துரை, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஹரிஹரசுதன், ஷாஜகான், ஐஸ்வர்ய மஹாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

 

 

Previous Post Next Post