திருப்பூரில் 2000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா சேலைகள்


பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சி பகுதி மற்றும் முதலிபாளையம் ஊராட்சிப்பகுதி ஹவுசிங் யூனிட்டில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்லடம் எம்.எல்.ஏ. வின் சொந்த நிதியிலிருந்து  சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், பல்லடம் எம்.எல்.ஏ.,வுமான கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.என். விஜயகுமார் ஆகியோர் 2000 இஸ்லாமிய பெண்களுக்கு விலையில்லா சேலைகளை வழங்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் பல்லடம் டி.எஸ்.பி.முருகவேல், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், மங்கலம் சில்வர் வெங்கடாசலம், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் முருகசாமி,  ஒன்றிய கவுன்சிலர் கல்பனா வேலுசாமி, முதலிபாளையம் ஊராட்சி தலைவர் மயூரிபிரியா நடராஜ், ஊராட்சி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் காசிம், சின்னப்புதூர் சௌந்தரராஜன், சிராஜ்தீன், முத்துசாமி, மூர்த்தி, மணி, இடுவாய் சென்னியப்பன், பழனியப்பன், பழனிவேல், சண்முகம், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.