கோபியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மளிகை பொருட்கள், முககவசம் வழங்கப்பட்டது


ஈரோடு வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோபி நகருக்கு உட்பட்ட ராமர் எக்ஸ்டென்சன், மின் நகர், திருமால் நகர் ஆகிய பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண  பொருட்களாக 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், முககவசம் ஆகியவை மாவட்ட செயலாளர் தினேஷ்குமார்,மாநில செயலாளர் ஜனகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர்  பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முனுசாமி ஆகியோரது ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் அஜீத்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.