உடன்குடியில் மதிமுக 27வது ஆண்டு துவக்க விழா; ஒன்றியம், நகரம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

உடன்குடியில் மதிமுக 27வது ஆண்டு துவக்க விழாவையொட்டி உடன்குடி ஒன்றியம், நகரம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

 


 

ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரபுதாஸ், ஒன்றிய இளைஞரணிச்  செயலாளர் திருமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன்குடி நகர திமுக செயலாளர் ஜாண்பாஸ்கர், மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட திமுக  சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சிராசுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.