காஞ்சிராங்குளம் கிராமத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்று வந்த 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 30 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தனர்.

 


 

கொரோனா வைரஸ் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் 20 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது அதனால் அங்கு வேலை செய்து வந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு லாரியின் மூலம் சென்றனர்.

 

இதில் வேப்பூர் அடுத்த காஞ்சிராங்குளம் சேர்ந்த 30 பேர் வந்திருந்தனர் அவர்களை அரசு தொழுதூர் நாவலர்நெடுஞ்செழியன் தனியார் கல்லூரியில் தணிமை படுத்தப்பட்டு 14 நாட்கள் பரிசோதனை செய்து வந்தனர்.

 

பரிசோதனையில் அவர்களுக்கு  கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது இதையடுத்து அந்த 30 பேரும்  வீட்டிற்கு அணுப்பிவைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவர் பணச்செல்வி பெரியசாமி அவர்களின் வீட்டிற்கு சென்று அரிசி, பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

 

அதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

 

உடன் ஊராட்சிமன்ற துணைதலைவர் வேளாங்கண்ணி மணிகண்டன்,செயலர் சிவா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.