பவானி ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்


பவானி ஆற்றோரம் பழனிபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் பிரபு35, இவர் 300 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பவானி போலீசாருக்கு  ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தபோது தகவல் கிடைத்தது.


தகவலின் பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர்  சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உதவி ஆய்வாளர் வடிவேல் குமார் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று  ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த  ரேஷன் அரிசியை  பறிமுதல் செய்து அரிசி கடத்தல் தடுப்பு அதிகாரி  முகமது தாரிக் அவர்களிடம் ஒப்படைத்தனர்  இதனால்  அப்பகுதி  பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்