39 மகளிருக்கு ரூபாய் 11 லட்சத்து 20,000 ரூபாய் கொரோனா சிறப்பு கடன்; விண்ணப்பள்ளி ஊராட்சி வாலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டது


பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பவானிசாகர் ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி வாலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழு 39 மகளிருக்கு ரூபாய் 11 லட்சத்து 20,000 ரூபாய் கொரோனா சிறப்பு கடன்,  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் வழங்கினார்.


ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பார்த்திபன், கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா,சார்பதிவாளர் ஸ்ரீதர்,மகளிர் திட்ட உதவி அலுவலர் அன்பழகன்,சங்கத்தலைவர் கஸ்தூரி, செயலாளர் கோவிந்தராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் பழனிச்சாமி, வரதராஜ் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயமணி கணேசன், மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமிபழனி, பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் கே.துரைசாமி, ஒன்றிய துணைத்தலைவர் பாலன்,சங்க இயக்குனர்கள்  செல்வம்,மணியன், ஜீவா,மணி, ரேவதி ,பால்ராஜ் ,பழனிச்சாமி, வேலுச்சாமி சங்கத் தலைவர்கள் நல்லூர் மூர்த்தி ,தொப்பம்பாளையம் ஆறுமுகம்,சங்க செயலாளர்கள் பழனிச்சாமி, அன்பரசன்,ராஜாமணி, தங்கவேல் பவானிசாகர் வட்டார சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி அகிலாண்டேஸ்வரி,ஊராட்சி செயலாளர் ரங்கநாதன்,  தாமோதரன்,சுப்ப நாயக்கர், பெரிய சாத்தனூர் பழனிச்சாமி, கதிர்வேல், வீரன் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.