திருப்பூரில் ரூ.4.41 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்: சு.குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்


திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட, மாநகராட்சி 35-வது வார்டு, கே.பி.என். காலனியில் 3 வது வீதி விரிவு, வி.கே.ஆர். தோட்டம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4.41 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அர்பன் பாங்க் தலைவர் பி.கே.எஸ்.சடையப்பன், உதவி ஆணையர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் சந்திரசேகர், சுகாதார அலுவலர் பிச்சை, முன்னாள் கவுன்சிலர்கள், மூர்த்தி, கண்ணப்பன், ராசாமணி, கிட்டு, பன்னீர்செல்வம், ஆண்டவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.