திருப்பூரில் 500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்


திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,சார்பில், மாநகராட்சி 50வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார். 


ஏழை எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி  தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வார்டு கிளைச்செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரத்தினகுமார், நீதிராஜன், ஹரிஹரசுதன், ஷாஜகான், பரமராஜன், கருவம்பாளையம் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.