தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா... 15,510 ஆனது மொத்த பாதிப்பு

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் மட்டும் 710 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 710 பேர், வெளிமாநில, மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் இன்று 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் 15,512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இன்று 5 பேர் இறந்ததுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 103 ஆக உள்ளது.


இன்று மட்டும் 12,155 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை 3,97,340 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.


 


இதுவரை 7491 பேர் குணமடைந்து வீடு சென்று விட்ட நிலையில், இன்னும் 7915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 17 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருவண்ணாமலையில் 6 பேர் மற்றும் விழுப்புரத்தில் 4 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளது தெரிய வருகிறது.