வேகமா போகாதீங்கன்னு சொன்னது குத்தமாடா...மளிகை கடைக்காரரை வெட்டி விட்டு அரிவாளுடன் அளப்பறை செய்த சுள்ளான்கள்... கொத்தாக தூக்கிய போலீசார்

திருப்பூர் பாலையக்காடு கோல்டன் நகர் அருகில் உள்ள சூர்யா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 


நேற்று மாலை இவரது மளிகை கடை உள்ள பகுதியில், என்.ஆர்.கே. புரதத்தை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சத்தம் எழுப்பிக் கொண்டு சென்றுள்ளனர். இதை பார்த்த ராஜேஷ் அந்த சிறுவர்களை ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார்.


இனிமேல் இப்படி வேகமாக இந்த பகுதியில் செல்லக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். 


அப்போது அவர்கள் சத்தம் இல்லாமல் சென்று விட்டு பின்னர் நண்பர்களுடன் வந்து தகராறு செய்துள்ளனர். 


அரிவாள் கம்பு சகிதம் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷ் ஐ அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.


மேலும் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 


இந்த நிலையில் ராஜேஸை வெட்டி விட்டு அந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாகனங்களில் கிளம்பும்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆரவாரமாக ஆபாச வார்த்தைகள் பேசி அலப்பறை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது