விழிப்புணர்வில் டிரெண்டிங்... திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயனுக்கு மத்திய அமைச்சகம் பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போரில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



நோய்த்தொற்று ஆரம்பித்த காலம் முதலே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
10 க்கும் குறைவான நோயாளிகள் எண்ணிக்கை இருந்தது முதல் திடீரென 30, 20 என எண்ணிக்கை அதிகரித்த காலம் என திருப்பூர் மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
நோய் தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்தும் பணி, கிருமி நீக்கம், பரிசோதனை என அனைத்திலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக பணிகளை செய்து வந்தது.



திருப்பூர் கலெக்டரின் பணிகள் செய்த பல நடவடிக்கைகள் மாநிலத்திலேயே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகலாக இருந்தது. 
குறிப்பாக கிருமி நாசினி பாதை அமைத்தது, அரசு மருத்துவ மனையில் பாதுகாப்பான நவீன கோவிட் பரிசோதனை மையம் அமைத்தது, நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டது என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாநிலத்திலேயே முதல் முறையாக திருப்பூரில் தான் மேற்கொள்ளப்பட்டன.
சமூக இடைவெளியை வலியுறுத்த குடைப்பிடிக்கும் பழக்கத்தை மக்கள் பின்பற்றக் கேட்டது மாநிலத்திலேயே பாராட்டு பெற்ற நடவடிக்கையாக இருந்தது.
போதாக்குறைக்கு திருப்பூர் மாநகர போலீசாரின் டிரோன் வீடியோக்களும் தாறுமாறாக வைரலாகி விழிப்புணர்வை ஏற்படுத்தின.
டாஸ்மாக் கடைகள் திறப்பின் போது குடை இல்லாமல் வருபவர்களுக்கு மது இல்லை என்று அறிவிக்கப்பட்டது நல்ல வரவேற்பை பெற்றது. மாவட்டம் முழுவதும் குடைப்பிடித்து வந்து சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.
இப்படி தொடர் விழிப்புணர்வு, கிருமி நீக்கம், பரிசோதனை, தனிமைப்படுத்தல் நடவடிக்கை என மாவட்டம் முழுவதும் எடுக்கப் பட்ட தீவிர நடவைக்கைகள் காரணமாக 114 என்று இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று ஒன்றுமில்லாமல் போய் உள்ளது. 
மேலும், புதிய தொற்றுக்கள் இல்லாமல் 10 நாட்களை கடந்து விட்ட நிலையில் விரைவில் பச்சை மண்டலமாக மாற உள்ளது திருப்பூர் மாவட்டம்.
இதற்காக களத்திலும், விழிப்புணர்வில் என புதிய முறைகளில் கோரோனாவை விரட்டிய திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயனின் புதுவகை விழிப்புணர்வுகளை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஸ்லைட் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
அந்த ஸ்லைடில் ' சமூக இடைவெளி மற்றும் வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் புது வழிகளில் விழிப்புணர்வு செய்து வருவதாகவும், அவரது இந்த விழிப்புணர்வு பெருமளவு பொதுமக்களைச் சென்று அடைந்துள்ளதாகவும் திருப்பூர் மக்கள் இப்பொழுது கலெக்டர் விஜய கார்த்திகேயன் வழிகளை பின்பற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post