குடியாத்தம் மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுனர் நல சங்கம் சார்பாக அரிசி பருப்பு சர்க்கரை காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்த சுற்றுலா வேன் ஓட்டுனர்களுக்கு குடியாத்தம் மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுனர் நல சங்கம் சார்பாக அரிசி பருப்பு சர்க்கரை காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளனர்.நிகழ்ச்சியில் வாகன போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்டராமன் மகாத்மா காந்தி ஓட்டுனர் நல சங்கத்தின் கௌரவத் தலைவர் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே.கே.என்.பழனி, மற்றும் குடியாத்தம் நகர கழக துணை செயலாளர் கஸ்பா, மூர்த்தி, வாகன ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைபொருள்கள் மற்றும் கபசுர குடிநீரை ஓட்டுநர்களுக்கு வழங்கியுள்ளனர்.


நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் க.முனுசாமி, செயலாளர், உமாபதி, பொருளாளர் திருநாவுக்கரசு சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்