சிறுகரம்பலூர் ஊராட்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆணையிட்டிருந்தார்.

 


 

அதன்பேரில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுகரம்பலூர் ஊராட்சியில்  மண்டல செயலாளர் திருமாறன்  தலைமையில் அருந்ததியர் மக்களுக்கு விவசாய அணி மாவட்ட துணை செயலாளர் சங்கர், முகாம் செயலாளர் ரஞ்சித் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் சுதாகர் ஆகியோர் அரிசி, பருப்பு காய்கறிகள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கினார்கள். மேலும் திட்டக்குடி பகுதியில் உள்ள  பூம்பூமாட்டுகாரர்கள், கொரவர்கள், அருந்ததியர் ஆகியோர்க்கும்  திருமாறன் தலைமையில் வழங்கப்பட்டது.